Friday, December 27, 2024
HomeIndiaகள்ள காதலனுக்காக கணவனை திட்டமிட்டு கொலை செய்த மனைவி.

கள்ள காதலனுக்காக கணவனை திட்டமிட்டு கொலை செய்த மனைவி.

பெண் ஒருவர் தனது கள்ள காதலனுடன் சேர்ந்து தனது கணவரைக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திர பிரதேச மாநிலம், விசாகப்பட்டினத்தில் உள்ள தகராபு வலசை என்ற ஊரில் எம்பிடி காலனியை சேர்ந்த ஜோதி.

இவருக்கும் பைடி ராஜ் என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 2 குழந்தைகளும் உள்ளது. ஜோதியின் கணவர் பைடி ராஜ் டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வந்தார்.

திருமணத்திற்கு முன்பு ஜோதிக்கும், சுரு ராஜ் என்பவருக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது என்று கூறப்படுகிறது.

திருமணத்திற்கு பிறகும் ஜோதி தனது காதலனுடன் நெருக்கமாக இருந்துள்ளார். இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்துள்ளனர்.

இதற்கென தனியாக வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்துள்ளனர். வெளியூரில் வேலை இருப்பதாக கூறி அடிக்கடி கள்ளக் காதலனை சந்தித்துள்ளார் ஜோதி.

ஒரு கட்டத்தில் இந்த விவகாரம் ஜோதியின் கணவர் பைடி ராஜ் இற்கு தெரிய வர, இருவரையும் கண்டித்துள்ளார்.

இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட, கணவரை கொல்ல ஏற்பாடு செய்தார் மனைவி ஜோதி.

கள்ள காதலனுடன் போட்ட திட்டத்தின் படி உணவில் தூக்க மாத்திரை கலந்து மயக்க மடைய வைத்திருக்கிறார்கள்.

பிறகு கழுத்தை நெரித்து கொன்று, நாடகமாடியுள்ளனர். உடலை பின்பு யாருக்கும் தெரியாமல் எரித்து விட்டனர்.

யாருக்கும் தன் மேல் சந்தேகம் வராமல் இருக்க கணவரை காணவில்லை என்று பொலிஸில் புகார் அளிக்க சென்றுள்ளார்.

பிறகு பொலிஸார் நடத்திய விசாரணையில் உண்மையை ஒப்புக் கொண்டார் ஜோதி. பிறகு இதற்கு உடந்தையாக இருந்த கள்ள காதலனையும் கைது செய்தனர்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments