Friday, December 27, 2024
HomeWorldஉலகின் முதல் 10 பணக்காரர்கள்.

உலகின் முதல் 10 பணக்காரர்கள்.

உலகின் பில்லியனர்களின் முதல் 10 பட்டியலில் முகேஷ் அம்பானி இடம்பிடித்துள்ளதாக சர்வதேச பத்திரிகை ஒன்று குறிப்பிட்டுள்ளது.

போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி இடம் பிடித்துள்ளார்.

உலகின் முதல் பத்து கோடீஸ்வரர்களில் இவரும் ஒருவர். ஒன்பதாவது இடம் முகேஷ் அம்பானிக்கு சொந்தமானது.

முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 83.4 பில்லியன் டொலர் ஆகும். இந்திய பணமதிப்பில் ரூபாய் 6,89,013 கோடி ஆகும்.

பிரான்ஸ் நாட்டு ஆடை விற்பனையாளர் பெர்னார்ட் அர்னால்ட் (Bernard Arnault & family) முதலிடத்தில் உள்ளார். இதனிடையே, பில்லியனர் பட்டியலில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஒருவர் முதலிடம் பிடித்தது இதுவே முதல்முறை. பெர்னார்ட்டின் நிகர மதிப்பு $211 பில்லியன் ஆகும்.

பெர்னார்ட் LVMH Moët Hennessy Louis Vuitton-ன் நிறுவனர், தலைவர் மற்றும் CEO ஆவார், இது உலகின் மிகப்பெரிய ஆடம்பர பொருட்கள் நிறுவனமாகும்.

டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் (Elon Musk) இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். மஸ்கின் நிகர மதிப்பு $180 பில்லியன்.

மூன்றாவது இடத்தில் இ-காமர்ஸ் நிறுவனமான அமேசானின் ஜெஃப் பெசோஸ் (Jeff Bezos) உள்ளார். ஜெஃப்பின் நிகர மதிப்பு $114 பில்லியன்.

ஆரக்கிள் இணை நிறுவனர் லாரி எலிசன் (Larry Ellison) 107 பில்லியன் டொலர்களுடன் நான்காவது இடத்தைப் பிடித்தார், வாரன் பஃபெட் (Warren Buffett) 106 பில்லியன் டொலர்களுடன் ஐந்தாவது இடத்தைப் பிடித்தார்.

மைக்ரோசாப்ட் தலைவர் பில்கேட்ஸ் (Bill Gates) ஆறாவது இடத்தில் உள்ளார். இவரது சொத்து மதிப்பு 104 பில்லியன் டொலர்கள். மைக்கேல் ப்ளூம்பெர்க் (Michael Bloomberg) 94.5 பில்லியன் டொலர்களுடன் ஏழாவது இடத்தில் உள்ளார்.

கார்லோஸ் ஸ்லிம் ஹெலு & குடும்பம் (Carlos Slim Helu & family) 93 பில்லியன் தோழர்களுடன் எட்டாம் இடத்தில் உள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments