Saturday, December 28, 2024
HomeSrilankaஇனவாதமும் மதவாதமும் ஆரம்பத்தில் வெல்வது போல தோன்றினாலும் இறுதியில் உறுதியாகவே படுதோல்வியடையும்.

இனவாதமும் மதவாதமும் ஆரம்பத்தில் வெல்வது போல தோன்றினாலும் இறுதியில் உறுதியாகவே படுதோல்வியடையும்.

உங்களை உங்கள் மக்களே ஆடைகளை களைந்து அம்மணமாக அடித்து விரட்டுகின்றனர். ஆற்றில் தூக்கி வீசுகின்றனர்.. உங்கள் மாளிகைகளை தீவைத்து எரிக்கின்றனர்… உங்கள் சிலைகளை இடித்து தகர்க்கின்றனர்..

நடுவீதியில் ஊஊஊ என ஊழையிட்டு விரட்டுகின்றனர்… கண்ட இடத்தில் காலகன்னியா காலகன்னியா ( உதவாக்கரை / உருப்படாதவன் ) என கலைத்தடிக்கின்றனர்.

ஆடைகளைந்து அம்மணமாகி மகிழும் கலாச்சாரத்தை 1983 தொடங்கி 2009 வரை தமிழர்கள் மீது தொடர்ந்து நிகழ்த்தி அந்த பெருமைக்குரிய கனவான்கள் நீங்கள் தானே. இப்போ உங்கள் ஆடைகளை எந்த அதிகாரமும் அற்ற சாதாரண மக்கள் களைந்தெறிகின்றனர்.

அன்று அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு ஆயுத முனையில் ஆடைகளைந்து மகிழ்ந்த உங்கள் பெருமைக்குரிய கலாச்சாரம் இன்று உங்களின் மீதே திரும்பி பாய்கின்றது.

அவலத்தை கொடுத்தவனுக்கு அவலத்தை திருப்பி கொடுப்பது இப்படி தான். இதையே நாம் இயற்கை நீதி என நம்பினோம் அன்று.

இன்னும் இருக்கு.. இன்னும் இருக்கு.. ஒட்டுமொத்த இனவாதிகளையும், மதவாதிகளையும் உங்கள் மக்களே ஆடைகளைந்து அம்மணமாகி அறுவடை செய்வார்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments