கம்போடியா நாட்டின் தலைநகர் புனோம் பென்னில் கேளிக்கை விடுதியில் ஏற்பாட்ட தீ விபத்தில் 6 பேர் பலியாகியுள்ளனர். இந்த விடுதியின் ஒருபுறம் கட்டிடத்தை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
அதேசமயம் விடுதியின் ஒரு அறையில் கேளிக்கை நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில் வார விடுமுறையை முன்னிட்டு அங்கு பலர் சென்றிருந்தனர். இதன்போது விடுதியின் ஒரு அறை திடீரென தீப்பிடித்து எரிந்தது.
இதனை பார்த்ததும் அங்கிருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியேறினர். இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து சென்று தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
எனினும் இந்த தீ விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி காயம் அடைந்தவர்களுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறதாகவும் கூறப்படுகின்றது.