மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி காந்தி பூங்கா எதிரில் வசிக்கும் முத்துராமன் என்பவர், சொகுசு கார் ஒன்றை வாங்கி, தனது வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்தார்.
இந்நிலையில், நள்ளிரவில் அங்கு வந்த மர்மநபர்கள், காரின் 4 டயர்களையும் திருடிச் சென்றனர். கார் டயர்கள் திருடப்பட்டதால் அதிர்ச்சியடைந்த முத்துராமன், அதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தபோது, காரில் வந்து டயர்களை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.