இந்தோனேசியாவின் முக்கிய தீவான ஜாவாவின் சில பகுதிகளில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. யோக்யகர்த்தா மாகாணத்தின் பந்துல் ரீஜென்சியில் உள்ள பாம்பாங்லிபுரோவில் இருந்து தென்மேற்கே 84 கிலோமீட்டர் (52 மைல்) தொலைவில் 86 கிலோமீட்டர் (53.4 மைல்) ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
யோககர்த்தாவின் சிறப்பு மாகாணத்திலும் அதன் அண்டை மாகாணங்களான மத்திய ஜாவா மற்றும் கிழக்கு ஜாவாவிலும் உள்ள வீடுகளும் கட்டிடங்களும் சில நொடிகள் அதிர்ந்ததால் மக்கள் பீதியடைந்தனர். இந்தோனேசியாவின் வானிலை, தட்பவெப்பநிலை மற்றும் புவி இயற்பியல் நிறுவனம் நிலநடுக்கத்தால் சுனாமி ஆபத்து இல்லை என்று தெரிவித்தது.