Saturday, January 4, 2025
HomeRecipesபாதாமி மட்டன் குருமா...

பாதாமி மட்டன் குருமா…

தியாகத் திருநாளான பக்ரீத் பண்டிகை வரப்போகிறது. பக்ரீத் என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது தான் பிரியாணி தான். ஆனால் இந்த பக்ரீத் பண்டிகை அன்று வெறும் பிரியாணியை மட்டும் செய்யாமல், அதற்கு சைடு டிஷ்ஷாக பாதாமி மட்டன் குருமாவை செய்தால் இன்னும் அட்டகாசமாக இருக்கும்.

இந்த பாதாமி மட்டன் குருமா பிரியாணி மற்றும் சாதத்துடன் மட்டுமின்றி, நாண், சப்பாத்தி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். முக்கியமாக இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் சுவையாக இருக்கும்.

உங்களுக்கு பாதாமி மட்டன் குருமா எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பாதாமி மட்டன் குருமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்: வறுத்து அரைப்பதற்கு…

* கிராம்பு – 4-6 * பட்டை – 1 இன்ச் * மிளகு – 6-8 * பச்சை ஏலக்காய் – 3-4 * கருப்பு ஏலக்காய் – 2 * முந்திரி – 10-12 * பாதாம் – 15-20 * பெரிய வெங்காயம் – 1 கப் (நறுக்கியது மற்றும் பொன்னிறமாக வதக்கியது) குருமாவிற்கு.. * நெய் – 4 டேபிள் ஸ்பூன் * எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன் * மட்டன் – 1 கிலோ * இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் பேஸ்ட் – 4 டீஸ்பூன் * தயிர் – 1 கப் (1 டேபிள் ஸ்பூன் மைதா சேர்த்து கலந்தது) * மல்லித் தூள் – 2 டேபிள் ஸ்பூன் * காஷ்மீரி மிளகாய் தூள் – 2 டீஸ்பூன் * மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன் * சீரகத் தூள் – 1/2 டீஸ்பூன் * உப்பு – சுவைக்கேற்ப * குங்குமப்பூ – 10-12 (2 டேபிள் ஸ்பூன் நீரில் ஊற வைத்தது) * கொத்தமல்லி – சிறிது (அலங்கரிக்க)

செய்முறை: *

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். * பின்னர் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து நல்ல மணம் வரும் வரை வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும். * பின்பு மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்கள் மற்றும் வதக்கிய வெங்காயத்தை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். * பின் மட்டனை நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். * பிறகு ஒரு அகலமான வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து சூடானதும், மட்டன் துண்டுகளை சேர்த்து உயர் தீயில் வைத்து 8-10 நிமிடம் வேக வைக்க வேண்டும். * பின்பு அதில் அரைத்த மசாலா, இஞ்சி பூண்டு மிளகாய் பேஸ்ட் சேர்த்து 3-4 நிமிடம் கிளறி விட வேண்டும். * பின் அதில் தயிர், மல்லித் தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள், சீரகத் தூள், சுவைக்கேற்ப உப்பு சேர்த்த கிளறி, 3-4 நிமிடம் வேக வைக்க வேண்டும். * அடுத்து அதில் 2 கப் நீரை ஊற்றி கிளறி, மூடி வைத்து ஒரு மணிநேரம் மட்டனை வேக வைக்க வேண்டும். அப்படி வேக வைக்கும் போது அவ்வப்போது கிளறி விட வேண்டும். * மட்டன் நன்கு வெந்ததும், குங்குமப்பூ ஊற வைத்த நீரை சேர்த்து கிளறி, வேண்டுமானால், சிறிது நீரை ஊற்றி கிளறி, கொதிக்க வைத்து இறக்கி, மேலே கொத்தமல்லியைத் தூவினால், சுவையான பாதாமி மட்டன் குருமா தயார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments