நேற்று புதன்கிழமை மாலை பரிசில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தினை அடுத்து, கட்டிட இடிபாடுக்குள் குறைந்தது இருவர் சிக்குண்டிருக்கலாம் என அறிய முடிகிறது. காயமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 37 ஆக அதிகரித்துள்ளது.
5 ஆம் வட்டாரத்தின் rue Saint-Jacques வீதியில் உள்ள அமெரிக்கன் அகாடமி கட்டடத்தின் முகப்பில் இந்த வெடிப்பு மாலை 4.55 மணி அளவில் இடம்பெற்றது. எரிவாயுக்கசிவினால் இந்த பாரிய வெடிப்பு ஏற்பட்டதாகவும், அதையடுத்து அது பாரிய தீ விபத்தாக மாறி, அருகில் உள்ள கட்டிடங்களுக்கும் பரவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தமாக 3 பேர் இதில் காயமடைந்துள்ளனர். அவர்களில் ஐவர் படுகாயமடைந்து உயிருக்கு போராடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, கட்டிட இடிபாட்டுக்குள் குறைந்தது இருவர் சிக்கியிருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
பரிஸ் நகர முதல்வர் ஆன் இதால்கோ சம்பவ இடத்தினை நேரில் சென்று பார்வையிட்டார். 270 தீயணைப்பு படையினர் 70 தீயணைப்பு வாகனக்களைப் பயன்படுத்தி தீயை கட்டுப்படுத்தினர்.
உள்துறை அமைச்சர் மற்றும் பிரதமர் ஆகியோர் இச்சம்பவம் தொடர்பில் கவலை வெளியிட்டுள்ளனர்.