Saturday, December 28, 2024
HomeWorldUK Newsலண்டனில் ஏலத்திற்கு வரும் ரூபன்ஸ் ஓவியம்.

லண்டனில் ஏலத்திற்கு வரும் ரூபன்ஸ் ஓவியம்.

கலைப்பொருட்களை சேகரித்து ஏலம் மூலம் விற்பனை செய்யும் உலகின் பிரபலமான நிறுவனமான சோத்பி நிறுவனம், நியூயார்க் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. உலகின் பல்வேறு காலகட்டங்களைச் சேர்ந்த கலைப்பொருட்கள் இந்த நிறுவனம் மூலம் ஏலம் விடப்பட்டுள்ளன. இந்நிலையில், நூற்றுக்கணக்கான வருடங்களாக தவறாக அடையாளம் காணப்பட்ட, “பீட்டர் பால் ரூபன்ஸ்” வரைந்த ஓவியம் ஒன்று, லண்டனில் உள்ள சோத்பி ஏல நிறுவனத்தில் அடுத்த மாதம் ஏலத்திற்கு வருகிறது.

இது ஏலத்தில் கிட்டத்தட்ட 7.7 மில்லியன் டாலருக்கு விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஓவியத்தை வரைந்தவரின் உண்மையான ஓவியர் ரூபன்ஸ் என கண்டுபிடிக்கப்பட்ட பிறகு அதனை விற்பதற்கான முதல் முயற்சி இதுதான். கடைசியாக அந்த ஓவியம் 2008ம் வருடம் 40000 மில்லியன் டாலருக்கு விற்பனை ஆனது. அப்பொழுது அந்த ஓவியத்தை வரைந்தது பிரான்ஸ் நாட்டு ஓவியரான “லாரண்ட் டி லா ஹைர்” என்பவர் என தவறுதலாக பதிவு செய்யப்பட்டிருந்தது.

அப்பொழுது பரபரப்பாக பேசப்பட்ட இந்த ஓவியத்தை, ஓவியர் ரூபன்சின் காணாமல் போன ஓவியம் என்பதை நிபுணர்கள் உறுதி செய்தனர். இதற்கு முன்பு, இத்தாலி நாட்டின் ரோம் நகரிலுள்ள “கேலரியா கோர்ஸினி” எனும் அரங்கில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த ஒரு ஓவியத்தின் பெயர், “செயிண்ட் செபஸ்டியன் டெண்டட் பை ஏஞ்சல்ஸ்” என்று தவறுதலாக கண்டறியப்பட்டிருந்தது. ஜெர்மனியில் 2021ம் வருடம் நடைபெற்ற ஒரு கண்காட்சியில் இரண்டு ஓவியங்களும் அருகருகே வைக்கப்பட்ட பொழுது, தற்பொழுது ஏலத்திற்கு வந்திருக்கும் ஓவியம்தான் அசல் ரூபன்ஸ் ஓவியம் என்றும் “கேலரியா கோர்ஸினி” அரங்கில் உள்ளது அதனுடைய நகல் என்றும் உறுதிபட தெரிவித்தனர். ஓவியம் மற்றும் கலைப்பொருட்களுக்கான வரலாற்று நிபுணர் அன்னா ஓர்லேண்டோ 2021ம் வருடம் ஸ்டுட்கார்ட் கண்காட்சியில் இரண்டு ஓவியங்களும் அருகருகே காட்சிக்கு வைக்கப்படுவதால் இரண்டையும் ஒப்பிட்டு பார்ப்பது எளிதாக இருக்கும்.

ஓவியத்திலிருக்கும் உயர்தர வேலைப்பாடு தெரிய வரும், என முன்பு கூறியிருந்ததாக சோத்பி தனது குறிப்பில் தெரிவிக்கிறது. எக்ஸ்-ரே கதிரியக்க பரிசோதனை மூலமாக அசல் எது என தெரியவந்துள்ளதாகவும் தெரிகிறது. ரோமானிய வீரர் செபஸ்டியன் கிறிஸ்தவ மதத்திற்கு மாறுவதற்கு சற்று நேரத்திற்கு முன்பாக அம்புகளால் துளைக்கப்பட்டு குற்றுயிராக விடப்படுகிறார். ஆனால், தேவதைகள் அதிசயிக்கத்தக்க விதமாக அவரை காப்பாற்றி விடுகிறது.

இந்த ஓவியம் வரையப்பட்டிருப்பதற்கான பின்னணி கதை இதுதான். நிபுணர்களின் கருத்துக்களின்படி, ராணுவ தளபதியும், பிரபுவுமாகிய இத்தாலி நாட்டின் “அம்ப்ரோஜியோ ஸ்பினோலா”, இந்த ஓவியத்தை வரையுமாறு ரூபன்சை பணித்திருக்கிறார் என்றும் 1600ம் ஆண்டு ஆரம்பத்திலேயே இது வரைந்து முடிக்கப்பட்டிருக்கும் என்றும் தெரிவிக்கின்றனர். சோத்பி ஏல நிறுவனத்தின் பண்டைய கால சிறப்புமிக்க ஓவியங்கள் பிரிவின் இணை தலைவரான ஜார்ஜ் கோர்டான் மீது இந்த ஓவியம் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அவர் இதுகுறித்து கூறும்போது, “பிரஷ்ஷின் கைவண்ணம் துடிப்பாக தெரிகிறது. ஓவியரின் வேகத்தையும், சுறுசுறுப்பையும் எளிதாக புரிந்துகொள்ள முடிகிறது. ஓவியர் ரூபன் அவர்களின் பிரஷ் என்னோடு நன்றாக பேசுவது போலிருந்தது” என குறிப்பிட்டுள்ளார். இந்த ஓவியம் 1730களில் காணாமல் போய், பின்பு 1963ம் வருடம் மிசௌரியில் மீண்டும் கண்டறியப்பட்டது என ஏல நிறுவனம் தெரிவிக்கிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments