இன்று காலை ஹட்டன் நகரில் உள்ள பிரபல பாடசாலையான ஹஐலன்ஸ் கல்லூரி முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கல்லூரியில் 2259 மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
இவ்வாறு கல்வி பயிலும் மாணவர்களுக்கு 104 ஆசிரியர்கள் சேவையில் ஈடுபட்டு வரும் வேளையில் தற்போது உடன் அமுலுக்கு வரும் வகையில் 30 ஆசிரியர்கள் இடமாற்றம் செய்ய பட்டு வேறு பாடசாலைக்கு சென்று விட்டதால் இப் கல்லூரியில் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளில் பாரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இந்த பின்னடைவினால் எதிர் வரும் மாதங்களில் நடைபெற உள்ள அனைத்து பரீட்சையில் தோற்ற விருக்கும் மாணவ மாணவியர்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகும் நிலை தோன்றியுள்ளது என கோரிக்கை முன் வைத்து இந்த போராட்டம் நடைபெற்றது.