உக்ரைன் -ரஷியா இடையிலான போர் ஒரு ஆண்டுக்கு மேலாக தொடர்ந்து வருகிறது. ரஷியாவின் தாக்குதல்களை உக்ரைன், தனது நட்பு நாடுகளின் உதவிகளோடு எதிர்கொண்டு வருகிறது. இருப்பினும், ரஷியா தனது போரை முடிவுக்கு கொண்டுவருவதாக இல்லை. இந்த நிலையில், கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைனில் உள்ள ஏழு கிராமங்களை ரஷியப் படைகளிடம் இருந்து கைப்பற்றியதாக உக்ரைன் தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த வார இறுதியில் நடத்தப்பட்ட தாக்குதல் நடவடிக்கைகளில் கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைனில் உள்ள ஏழு கிராமங்களை ரஷியப் படைகளிடம் இருந்து மீட்டுள்ளதாக துணை பாதுகாப்பு அமைச்சர் கன்னா மல்யார் தெரிவித்துள்ளார். மேலும் அவர், “தெற்கு சபோரிஜியா பகுதியில் உள்ள லோப்கோவோ, லெவாட்னே மற்றும் நோவோடரிவ்கா கிராமங்கள் மீண்டும் கைப்பற்றப்பட்டன. கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பிரதேசத்தின் பரப்பளவு 90 சதுர கிலோமீட்டர்கள் ஆகும்” என்றார்.