கொழும்பில் வைத்து இன்று காலை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பியைப் பிணையில் செல்ல கிளிநொச்சி நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
மருதங்கேணியில் பொலிஸாரின் பணிக்கு இடையூறு விளைவித்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் கஜேந்திரகுமார் எம்.பி. கைது செய்யப்பட்டிருந்த நிலையில், பலத்த பாதுகாப்புடன் பொலிஸ் ஜீப்பில் கிளிநொச்சிக்கு அழைத்து வரப்பட்டு இன்று மாலை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.
இதன்போதே அவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.