மலையகப் பாதையில் ரயில்களை இயக்குவதில் இடையூறு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஹாலி-எல மற்றும் உடுவரவுக்கு இடையிலான ரயில் பாதையில் பாறைகள் சரிந்துள்ளதன் காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் கூறியுள்ளது.
இதன் காரணமாக மலையக ரயில் சேவையின் கால அட்டவணை தற்காலிகமாக இரத்து செய்யப்படலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறெனினும் ரயில் பாதையில் சரிந்துள்ள பாறையினை அப்புறப்படுத்தி, ரயில் சேவையை வழமைக்குக் கொண்டு வரும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.