Saturday, December 28, 2024
HomeSrilankaPoliticsஇலங்கையின் முதல் மிதக்கும் சூரிய சக்தி மின் நிலையம் 

இலங்கையின் முதல் மிதக்கும் சூரிய சக்தி மின் நிலையம் 

இலங்கையில் முதல் மிதக்கும் சூரியசக்தி மேம்பாட்டுத் திட்டத்தை உருவாக்குவதற்கான ஒப்பந்தம் இன்று (31) காலை கொரியா தொழில்நுட்ப மேம்பாட்டுக்கான நிறுவனம் (KIAT) மற்றும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு ஆகியவற்றுக்கு இடையே கையெழுத்தானது.

ஒப்பந்தத்தின் கீழ் இரண்டு திட்டங்கள் உருவாக்கப்படவுள்ளதுடன், ஒவ்வொரு மிதக்கும் சூரிய சக்தி திட்டங்களும் 1 மெகாவாட் திறன் கொண்ட மின்சாரத்தை உற்பத்தி செய்யும்.இதற்கு நிலையான எரிசக்தி ஆணையத்திற்கு 5.2 மில்லியன் அமெரிக்க டொலர் மானியம் KIAT மூலம் நீட்டிக்கப்பட்டது.

கொரிய பொறியியல் நிறுவனத்தினால் உருவாக்கப்படும் திட்டங்கள் சப்ரகமுவ மாகாணத்தில் சந்திரிகா வெவ மற்றும் ஊவா மாகாணத்தில் கிரி இப்பன் வெவ ஆகிய இடங்களில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.

2024 டிசம்பர் மாதத்திற்குள் இத்திட்டத்தை நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர மேலும் தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments