எதிர்வரும் பெளர்ணமி தினத்தை முன்னிட்டு 10 விசேட ரயில் சேவைகளை முன்னெடுக்க ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
நாளை (01) முதல் எதிர்வரும் 5 ஆம் திகதி வரை இந்த ரயில் சேவைகள் இடம்பெறும். இதன்படி, பெலியத்த, காலி மற்றும் கொழும்பு – கோட்டையில் இருந்து அனுராதபுரம் வரை விசேட ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
அனுராதபுரத்தில் இருந்து கொழும்பு – கோட்டை உட்பட பல இடங்களுக்கு பல விசேட ரயில் சேவைகள் இடம்பெறவுள்ளதாகவும் ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
இதேவேளை, அனுராதபுரம், அட்டமஸ்தானா, மிஹிந்தலை ஆகிய பிரதேசங்களில் பெளர்ணமி பண்டிகையை கொண்டாட வரும் பக்தர்களுக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அனுராதபுரம் மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது.