இரத்த அழுத்தத்தை கண்காணிக்க குறைந்த விலையில் புதிய ஸ்மார்ட் போன்களை விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர். ஸ்மார்ட் போனின் கேமரா மற்றும் பிளாஷை பயன்படுத்தி பயனரின் விரல் நுனியில் இரத்த அழுத்தத்தை கண்காணிக்கும் எளிய, குறைந்த விலை கிளிப்பை அமெரிக்காவின் கலிபோர்னியா சான்டியாகோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த கிளிப் 3டி அச்சிடப்பட்ட பிளாஸ்டிக் இணைப்பு ஆகும். இது ஸ்மார்ட் போனின் கேமரா மற்றும் பிளாஷ் மீது பொருத்தலாம். இரத்தஅழுத்தத்தை அளவிட பயனர், கிளிப்பை அழுத்தும்போது ஸ்மார்ட் போனின் பிளாஷ் விரல் நுனியில் ஒளிரும். பின்னர் இரத்த அழுத்த அளவீட்டை காட்டும். இது தொடர்பாக ஆராய்ச்சியாளர்கள் கூறும்போது, இந்த தொழில்நுட்பம் வயதானவர்கள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு மிகவும் பயனளிக்கும்.
இரத்த அழுத்த கண்காணிப்புக்கான தடையை குறைக்க மலிவான தீர்வை நாங்கள் உருவாக்கி உள்ளோம்.
இந்த சாதனம் மற்ற இரத்த அழுத்த கண்காணிப்பில் இருந்து வேறுபடுகிறது. இரத்த அழுத்தத்தை அளவிட பயனர் விரல் நுனியில் கிளிப்பை அழுத்தினால் போதும் என்றனர்.