2023 ஆசிய கிண்ணத்தை இலங்கையில் நடத்துவதற்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் தயாராக இருப்பதாக கிரிக்பஸ் திங்களன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் 50 ஓவர் கொண்ட போட்டிக்கான இடத்தை தீர்மானம் செய்ய ஆசிய கிரிக்கெட் பேரவை (ACC) அதிகாரிகள் விரைவில் கூடுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு குறுகிய அறிவிப்பில், 2023 ஆசிய கிண்ணத்தை நடத்த ஸ்ரீலங்கா கிரிக்கெட் தயாராகவுள்ளது.
அது தொடர்பான தீர்மானம் எடுக்கும் முடிவு ஏ.சி.சி.யிடம் உள்ளது என்று SLC யின் உயர் அதிகாரி ஒருவர் திங்களன்று தெரிவித்ததாக கிரிக்பஸ் கூறியுள்ளது.
பாகிஸ்தானால் பரிந்துரைக்கப்பட்ட கலப்பின மாதிரியை இந்திய கிரிக்கெட் வாரியம் ஆதரிக்கவில்லை என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத்தில் உள்ள ஏசிசி உறுப்பினர்களிடம் கூறியதை அடுத்து இலங்கையின் மேற்கண்ட அறிவிப்பு வெளிவந்துள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (பிசிபி) தலைவர் நஜாம் சேத்தி, 2023 ஆசிய கிண்ணத்தை பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இணைந்து நடத்த பரிந்துரைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.