மட்டக்களப்பு பிரபல பாடசாலை ஒன்றில் கல்விபயிலும் 10 ஆம் தர மாணவன் ஒருவன் மேலுமொரு பிரபல பாடசாலையில் கல்வி கற்கும் 09 ஆம் தர மாணவிக்கு தாலி கட்டிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இருவருக்கும் இடையில் சில வருடங்களாக ஏற்பட்ட காதலில் சென்ற வருடம் குறித்த மாணவன் 09 தரத்தில் கல்விகற்கும் போது 08 தரத்தில் கல்வி பயிலும் மாணவிக்கு யாருக்கும் தெரியாமல் தங்கத்தில் தாலி கட்டியுள்ளான்.
இது யாருக்கும் தெரியாமல் ஒரு வருடம் கடந்துவிட்ட நிலையில் மாணவி சில தினகளுக்கு முன்பு பாடசாலைன் மூலம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருந்த போது குறித்த மாணவியின் கழுத்தில் தாலி இருப்பதை பார்த்த சக மாணவிகள் இது குறித்து வினவி ஆசிரியையிடம் தெரிவித்த போது ஆசிரியை கழுத்தை காட்டும் படி குறித்த மனைவியை கேட்டுக்கொண்டுள்ளார் ஆனால் மாணவி மறுக்க கட்டாயத்தின் பேரில் ஆசிரியை மனைவியின் கழுத்தை பார்த்த போது தாலி இருப்பதை உறுதிசெய்துள்ள ஆசிரியர் குறித்த மாணவன் மற்றும் மனைவியின் வீட்டில் தெரியப்படுத்தியுள்ளார்.