சீனா தனது முதல் சிவிலியன் விண்வெளி வீரரை செவ்வாய்க்கிழமை (மே 30) விண்வெளிக்கு அனுப்பும் என்று சீனாவின் விண்வெளி நிறுவனம் திங்களன்று தெரிவித்துள்ளது.
2030 ஆம் ஆண்டுக்குள் சாதாரண மனிதர்களை விண்வெளிக்கும் அனுப்பும் முயற்சியின் ஒரு பகுதியாக குறித்த நபர் செவ்வாய்க்கிழமை தியாங்கொங் விண்வெளி நிலையத்திலிருந்து சந்திரனுக்கு அனுப்பப்படவுள்ளார்.
இதுவரை, விண்வெளிக்கு அனுப்பப்பட்ட அனைத்து சீன விண்வெளி வீரர்களும் மக்கள் விடுதலை இராணுவத்தில் உறுப்பினர்களாக இருந்தனர்.
2030க்குள் சந்திரனில் விண்வெளி வீரர்களை தரையிறக்கத் திட்டமிட்டுள்ள சீனா, பல பில்லியன் டொலர்களை அதன் இராணுவத்தால் நடத்தப்படும் விண்வெளித் திட்டத்தில் முதலீடு செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.