Saturday, December 28, 2024
HomeSrilankaPoliticsதிருகோணமலை மாவட்டத்தில் காணாமற்போன ஆட்கள் பற்றிய விசாரணை

திருகோணமலை மாவட்டத்தில் காணாமற்போன ஆட்கள் பற்றிய விசாரணை

திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் பிரதேச செயலக பகுதியில் காணாமல் போன ஆட்கள் பற்றிய விசாரனை தொடர்பான நடமாடும் சேவை ஞாயிற்றுக்கிழமை (28) தம்பலகாமம் பிரதேச செயலக மண்டபத்தில் இடம் பெற்றது.

குறித்த விசாரனையினை காணாமல் போன அலுவலகம் முன்னெடுத்திருந்தது. காணாமல் போனவர்களின் உறவுகள் தங்களது சாட்சியோடு காணாமல் போனோர் ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்தனர்.

இதில் கிண்ணியா, கந்தளாய், தம்பலகாமம் ஆகிய பிரதேச பகுதிகளை உள்ளடக்கியவர்களில் சுமார் 40 க்கும் மேற்போட்டோர்கள் கலந்து கொண்டு சாட்சியங்களை வழங்கினர்.

இதில் காணாமல் போன அலுவலக உயரதிகாரிகள், தம்பலகாமம் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் என பலர் கலந்து கொண்டனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments