நாட்டில் ஜனநாயகத்துக்கு முரணாக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் மற்றும் சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோருக்கிடையிலான சந்திப்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனது இல்லத்தில் வெள்ளிக்கிழமை (26) இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன் போதே நாட்டின் சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது. அத்தோடு ஜனநாயகத்திற்கு முரணாக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் மற்றும் பொருளாதார ரீதியாக ஏற்பட்டுள்ள வீழ்ச்சி குறித்தும் இதன் போது விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.