உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ் மர்மகோவா போர்க் கப்பல் 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்திய கடற்படையுடன் இணைக்கப்பட்டது.
இந்தப் போர்க் கப்பலில் அதிநவீன ரேடார் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இலக்குகளை துல்லியமாக தாக்கும் திறன்கொண்ட ஏவுகணைகள் இதில் உள்ளன.
163 மீட்டர் நீளமும் 17 மீட்டர் அகலமும் கொண்ட இந்தப் போர்க் கப்பலின் எடை 7 ஆயிரத்து 400 டன் ஆகும். மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும்.
இந்தப் போர்க் கப்பலில் இருந்த ஏவுகணை மூலம் சூப்பர்சோனிக் இலக்கை இடைமறித்து அழிக்கும் சோதனையை இந்திய கடற்படை மேற்கொண்டது. அந்தச் சோதனை வெற்றிகரமாக நிறைவடைந்ததாக நேற்று கடற்படை தெரிவித்தது. மேலும், புதிய வரவான மர்மகோவா இந்திய கடற்படையின் தயார் நிலையை காட்டுகிறது என தெரிவித்துள்ளது.