கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2023 இன் முதல் காலாண்டில் விமானச் செயல்பாடுகளில் 7 சதவீதம் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
விமான பயணிகளின் எண்ணிக்கையிலும் 20 சதவீத அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக விமான நிலையம் மற்றும் விமானச் சேவைகள் நிறுவனம் கூறியுள்ளது.
கொரோனா தொற்றுநோய் நிலைமைக்கு முன்னர் இருந்த நிலைக்கு நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறையின் மீட்சி விரைவாக நெருங்கி வருவதாகவும் நிறுவனம் சுட்டிக்காட்டுகிறது.
2022 இன் முதல் காலாண்டில் 13 இலட்சத்து 74 ஆயிரத்து 130 ஆக இருந்த விமானப் பயணிகளின் எண்ணிக்கை 2023 இன் முதல் காலாண்டில் 16 இலட்சத்து 50 ஆயிரத்து 39 ஆக உயர்ந்துள்ளது.
2022 இன் முதல் காலாண்டில் 9,357 ஆக இருந்த விமானச் சேவை நடவடிக்கைகள் 2023 இன் முதல் காலாண்டில் 10,018 ஆக அதிகரித்துள்ளது. இது 7 சதவீத அதிகரிப்பு என்றும் விமான நிலையம் மற்றும் விமானச் சேவைகள் நிறுவனம் கூறியுள்ளது.