பௌத்தமதம் இந்து மதம் இஸ்லாம் ஆகியவற்றை அவமதிக்கும் விதத்தில் தெரிவித்த கருத்துக்களிற்காக மன்னிப்பு கோருவதாக போதகர் ஜெரோம் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு மீண்டும் வருவேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மிரிஹானையில் இடம்பெற்ற ஆராதனை நிகழ்வொன்றில் வீடியோ மூலம் கலந்துகொண்டவேளை அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தனது வார்த்தைகள் உணர்வுகளை புண்படுத்தியிருந்தால் அதற்காக பௌத்தர்கள் பௌத்தமதகுருமார்கள் இந்துசகோதரர்கள் இஸ்லாமிய சகோதர சகோதரிகளிடம் மன்னிப்பு கோருவதாக ஜெரோம் பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பௌத்தமதகுருமாரிடம் தான் பணிவுடன் மன்னிப்பு கேட்பதாக ஜெரோம் பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.
ஆனால் நான் உண்மையை தெரிவித்தமைக்காக மன்னிப்பு கோரவில்லை உணர்வுகளை காயப்படுத்தியமைக்காக மன்னிப்பு கோருகின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.
ஜேரோம் பெர்ணான்டோ தான் நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகளை தனது சட்டத்தரணிகள் மேற்கொண்டுள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளார். நான் நாடு திரும்புகின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.