Saturday, December 28, 2024
HomeSrilankaPoliticsமின்சாரக் கட்டணம் 27 சதவீதத்தால் குறைக்க வேண்டும் - பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

மின்சாரக் கட்டணம் 27 சதவீதத்தால் குறைக்க வேண்டும் – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

மின்சாரக் கட்டணத்தை 27 சதவீதமாகக் குறைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க, 3 வீதத்தால் குறைக்கும் இலங்கை மின்சார சபையின் முன்மொழிவு ஏற்றுக்கொள்ள கூடியதல்ல என தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு பெப்ரவரி மாதம், போலியான தரவுகளைக் காண்பித்து 66 சதவீதம் கட்டணம் உயர்த்தப்பட்டது. உண்மையில் அப்போது, 35 சதவீதம் மட்டுமே கட்டணத்தை உயர்த்தியிருக்க வேண்டும்.

அன்று, இலங்கை மின்சார சபையினால் மதிப்பிடப்பட்ட மின்சாரத் தேவையானது, 16 ஆயிரத்து 550 ஜிகாவாட். இந்த ஆண்டு மின்சாரத் தேவை 15 ஆயிரத்து
50 ஜிகாவாட் மணிநேரமாக மட்டுமே இருக்கும் என்பது எமது மதிப்பீடாக இருந்தது.
ஏப்ரல் மாதம், எமது மதிப்பீடு சரியானது மின்சார சபை எதிர்வரும் ஆண்டுக்கான தேவை 15,264 ஜிகாவாட் மணிநேரமாக இருக்கும் என்று மின்சாரசபை எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்தனர்.

ஆணைக்குழுவின் மதிப்பீட்டின்படி மின்சாரக் கட்டணங்களை நிர்ணயித்து அமுல்படுத்தியிருந்தால் இன்று மின்சார பாவனையாளர்கள் எதிர்நோக்கும் நிலைமை ஏற்பட்டிருக்காது.

மின்சார கட்டண திருத்தத்தில், இலங்கை மின்சார சட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட கட்டண முறையின் படி முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

அந்த முறையின்படி, மின்சாரம் வழங்குவதற்கான நியாயமான செலவை மட்டுமே மின்சார நுகர்வோரிடமிருந்து வசூலிக்க முடியும். எவ்வாறாயினும், மின்சார நுகர்வோர்களிடம் இருந்து மின்சார சபை பெற்ற கடனை மீளப்பெறுவதற்கான முன்மொழிவுகளை உள்ளடக்கி அங்கீகரிக்கப்பட்ட முறைக்கு பதிலாக இம்முறையும் கட்டண திருத்த யோசனையை நடைமுறைப்படுத்த முயற்சிக்கப்படுகிறது.

எரிபொருள். மின்சாரத்திற்காக அதிக சுமை சுமக்க நேரிட்டால், அது சாதாரண நுகர்வோர் மட்டுமின்றி தொழிலதிபரையும் பாதிக்கிறது.

எரிபொருள் விலை உயர்வால் எரிபொருள் தேவை குறைந்துள்ளது. அதிக மின் கட்டணத்தால் மின் தேவை குறைந்துள்ளது. எரிசக்தி நியாயமான விலையில் வழங்கப்பட வேண்டும்.

பொருளாதாரத்திற்கு வரம்பற்ற ஆற்றலை வழங்க வேண்டும். விலையை நியாயமாக குறைக்க வேண்டும். அதை உடனடியாக செய்ய வேண்டும்.

உலக சந்தையில் எரிபொருள் விலை குறைந்துள்ளது. கடந்த ஆண்டை விட மாற்று விகிதம் சிறப்பாக உள்ளது. அதற்கு பதில் நியாயமான முறையில் மக்களுக்கு நிவாரணம் வழங்க வாய்ப்பு கிடைத்துள்ளதால், உண்மையான செலவின் அடிப்படையில் எரிசக்தி விலை குறைக்கப்பட வேண்டும்.

மின்சாரசபை முன்வைத்துள்ள கட்டண திருத்த முன்மொழிவு தொடர்பான தேவையான தகவல்களை சமர்ப்பித்த பின்னர், கட்டண திருத்த முன்மொழிவு குறித்து பொது கலந்தாய்வு நடத்தி மக்களின் கருத்துகளின் அடிப்படையில் இறுதி முடிவை எடுக்க திட்டமிட்டுள்ளோம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments