Tuesday, January 7, 2025
HomeSrilankaஒட்டிசுட்டானில் சிறுமிகளை கடத்த முயற்சி பொலிஸார் தீவிர விசாரணை

ஒட்டிசுட்டானில் சிறுமிகளை கடத்த முயற்சி பொலிஸார் தீவிர விசாரணை

ஒட்டுசுட்டான் –  மாங்குளம் வீதியில் அமைந்துள்ள சின்னசாளம்பன் கிராமத்தில் கடத்தல் முயற்சி ஒன்று இடம்பெற்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

செவ்வாய்க்கிழமை (15) பிற்பகல் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட சின்னசாளம்பன் கிராமத்தில் பாடசாலைக்கு சென்று வீடு திரும்பிய இரு மாணவிகளை இலக்கு வைத்தே குறித்த சம்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் குறித்து கிராமவாசி ஒருவர் தெரிவிக்கையில், குறித்த இரு மாணவிகள் பாடசாலை முடித்து வீடு திரும்பும் போது  இரு வாகனங்கள் தம்மை பின்தாெடர்ந்ததாகவும் அதில் கூளர் ரக, ஹயஸ் ரக வாகனங்கள் பின் தொடர்ந்த நிலையில் ஒரு வாகனத்தில் இருந்து கதவு திறந்த ஐந்து பேர் கொண்ட குழுவினர் அந்த சிறுமிகளை தாம் வீட்டுக்கு கொண்டுவந்து விடுவதாகவும் கூறியுள்ளனர்.

குறித்த குழுவினரின் நடவடிக்கைகளினை சுவீகரித்த சிறுமிகள் அங்கிருந்து தப்பியோடி அருகில் உள்ள வீடு ஒன்றிற்குள் தப்பிஓடி குறித்த வீட்டுக்காரருக்கு தம்மை இரு வாகனங்கள் கடத்த முயற்சித்ததாகவும் தம்மிடம் மேற்கூறப்பட்டவாறு கடத்த முயன்றவர்கள் கூறியதாகவும் இது தொடர்பாக அயலவர்களுக்கு தெரியப்படுத்தியதும் குறித்த வாகனத்தின் நடமாட்டத்தினை கிரமவாசிகள் அவதானித்ததாகவும்  குறித்த கிராமவாசி தெரிவித்துள்ளார்.

இச் சம்பவம் குறித்து பின்னர் குறித்த சிறுமிகளின் பெற்றோருக்கு தகவல் வழங்கி பின்னர் பொலிஸில் முனறப்பாட்டினை வழங்கியதாகவும், இச் கடத்தல் சம்பவம் குறித்து ஒட்டுசுட்டான் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருதாகவும் கிராமவாசிகள் தெரிவித்துள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments