Sunday, December 29, 2024
HomeWorldசூடானில் மக்களைப் பாதுகாப்பதற்கான உறுதிப் பிரகடனம்

சூடானில் மக்களைப் பாதுகாப்பதற்கான உறுதிப் பிரகடனம்

சூடானில் உள்ள குடிமக்களைப் பாதுகாப்பதற்கான உறுதிப் பிரகடனத்தில் சூடான் ஆயுதப் படைகள் மற்றும் விரைவு ஆதரவுப் படைகளின் பிரதிநிதிகள் சவூதி அரேபிய ஜெத்தா நகரில் வியாழக்கிழமை (11) அன்று கையெழுத்திட்டதாக சவூதி அரேபியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் தெரிவிக்கின்றன.

சர்வதேச மனிதாபிமான சட்டம் மற்றும் மனித உரிமைகள் சட்டங்களுக்கிணங்க இரு தரப்பினரும் பொதுமக்களின் அவசர தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் மனிதாபிமான நடவடிக்கைகளை எளிதாக்குவதற்கான உறுதிப்பாட்டை வெளிப்படுத்துவதை இப்பிரகடனம் மூலம் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

இவ்வுறுதிப் பிரகடனமானது, மனிதாபிமான உதவிகளை பாதுகாப்பாக மேற்கொள்வதற்கும், அத்தியாவசிய சேவைகளை மீண்டும் முன்னெடுப்பதற்கும், மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகளில் இருந்து படைகளை மீளப்பெறுவதற்கும், இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கும், இரு படைகளினதும் செயற்படுகளை நெறிப்படுத்தும்.

இப்பிரகடனத்தில் கையொப்பமிட்டதைத் தொடர்ந்து, ஜெத்தா பேச்சுவார்தையானது, இந்நடவடிக்கைகளை எளிதாக்கும் வகையில், பத்து நாட்கள் வரை பயனுள்ள போர்நிறுத்தம் ஒன்றை மேற்கொள்வது குறித்த உடன்பாட்டை எட்டுவது தொடர்பாகக் கவனம் செலுத்தும். பாதுகாப்பு நடவடிக்கைகளில், அமெரிக்கா, சவூதி மற்றும் சர்வதேச சமுகத்தின் ஆதரவுடன் போர் நிறுத்த கண்காணிப்பு பொறிமுறையும் உள்ளடங்கும்.

இரு தரப்பினர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட மற்றும் ஒப்புக்கொள்ளப்பட்ட படிப்படியான அணுகுமுறைக்கு இணங்க, சூடான் குடிமக்கள், பிராந்திய மற்றும் சர்வதேச பங்காளிகளுடனான ஜெத்தா பேச்சுவார்த்தைகளின் போது, போரை நிரந்தரமாக நிறுத்துவது தொடர்பாக முன்மொழியப்பட்ட ஏற்பாடுகள் பற்றி சூடான் ஆயுதப் படைகளுடன் மற்றும் விரைவு ஆதரவுப் படைகளுடன் கலந்தாலோசித்து, அடுத்தடுத்த கட்டப் பேச்சுவார்த்தைகளின் போது ஆராயப்படும்.

அவ்வாறே, ஏற்பாட்டாளர்கள் சூடான் குடிமக்களுடனும் பிராந்திய மற்றும் சர்வதேச பங்காளிகளுடனும், அடுத்த சுற்றுப் பேச்சுக்களில் கலந்துரையாடல்களில் ஈடுபடுவதற்கும் எதிர்பார்த்துள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments