Thursday, December 26, 2024
HomeWorld(Belt and Road Initiative) திட்டத்தின் மூன்றாவது சர்வதேச ஒத்துழைப்பு மாநாடு சீன ஜனாதிபதி தலைமையில்...

(Belt and Road Initiative) திட்டத்தின் மூன்றாவது சர்வதேச ஒத்துழைப்பு மாநாடு சீன ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்.

“Belt and Road Initiative” திட்டத்தின் அடிப்படையில் எட்டு அம்சக் கொள்கை வெளியிடப்பட்டது.
அமைதி, பரஸ்பர ஆதரவு மற்றும் நட்புறவின் அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்ட” Belt and Road” முன்னெடுப்பு பழைய பட்டுப்பாதையின் நவீன வடிவம் என்றும், இதன் ஊடாக ஒரு நாட்டுக்கு மாத்திரமன்றி பல நாடுகளுக்கு பலன் கிடைக்கும் என்றும் சீன மக்கள் குடியரசின் ஜனாதிபதி ஜி ஜின் பிங் தெரிவித்தார்.

பெல்ட் அண்ட் ரோட் முன்னெடுப்பு திட்டத்தின் மூன்றாவது சர்வதேச ஒத்துழைப்பு மாநாடு இன்று (18) பீஜிங்கில் உள்ள மக்கள் மண்டபத்தில் சீன ஜனாதிபதி தலைமையில் 20 நாடுகளின் அரச தலைவர்கள் மற்றும் சுமார் 20 நாடுகளின் 130 நாடுகளின் பிரதிநிதிகளின் பங்குபற்றுதலுடன் ஆரம்பமானது. இதில் பிரதான உரையை சீன ஜனாதிபதி நிகழ்த்தினார்.
மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அரச தலைவர்கள் இராணுவ மரியாதையுடன் வரவேற்கப்பட்டனர்.

இதன் போது அரச தலைவர்கள், சீன ஜனாதிபதியுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
மாநாட்டில் உரையாற்றிய சீன ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில்,

ஒருவருக்கொருவர் எதிராகச் செயற்பட்டு மற்றவரை அடக்குவதற்குப் பதிலாக, அனைவரும் கைகோர்த்து ஒருவருக்கொருவர் ஆதரவுடன் எழுச்சி பெறுவதே “ரோட் அண்ட் பெல்ட் முன்னெடுப்பு” திட்டத்தின் எண்ணக்கருவின் முக்கியமான அடிப்படையாகும்.
பிறருக்கு உதவி செய்வதால் தனக்கு நலன் கிட்டும் என்பதே இதன் நோக்கமாகும் எனவும் சீன ஜனாதிபதி கூறினார்.
“பெல்ட் அண்ட் ரோட் முன்னெடுப்பு” திட்டம் ஆரம்பிக்கப்பட்டு 10 ஆண்டுகளில், சம்பந்தப்பட்ட அனைத்து நாடுகளும் பல குறிப்பிடத்தக்க சாதனைகளை அடைய முடிந்துள்ளது.

பொருளாதார உறவுகளை வலுப்படுத்த பல புதிய வழிகள் திறக்கப்பட்டுள்ளன என்றும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் சுட்டிக்காட்டினார். எதிர்காலத்தில் “பெல்ட் அண்ட் ரோட் முன்னெடுப்பு” திட்டத்திற்கு அடிப்படையாக அமையும் எட்டு அம்சக் கொள்கைகளையும் சீன ஜனாதிபதி வெளியிட்டார்.

சர்வதேச பலதரப்பு வலையமைப்பை உருவாக்குதல், உலகளாவிய திறந்த பொருளாதாரத்தை ஆதரித்தல், ஒத்துழைப்பிற்கான நடைமுறை அணுகுமுறையை உருவாக்குதல், பசுமை வளர்ச்சியை ஊக்குவித்தல், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுக்கான வாய்ப்புகளை வழங்குதல், ஒவ்வொருவருக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துதல், “பெல்ட் அண்ட் ரோட் முன்னெடுப்பு” திட்டம், உறுப்பு நாடுகளிடையே பிரிக்க முடியாத உறவை ஊக்குவித்தல், உறவுகளை ஊக்குவித்தல் மற்றும் அந்த நாடுகளுக்கு இடையே நிறுவன ரீதியான உறவுகளை வலுப்படுத்துவது என்பனவே அந்த எட்டு முக்கிய கொள்கைகளாகும்.

“பெல்ட் அண்ட் ரோட் முன்னெடுப்புத்” திட்டத்தின் ஊடாக நட்புறவின் கூட்டமைப்பை உருவாக்க முழுமையாக பங்களிக்குமாறு உச்சிமாநாட்டில் பங்கேற்ற அரச தலைவர்கள் உட்பட பிரதிநிதிகளிடம் பங்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
பல்வேறு கண்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தி ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) , கசகஸ்தான் ஜனாதிபதி காசிமி ஜோமார்ட் டோகாயேவ் (Kassym-Jomart Tokayev), இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விதோதோ (Joko Widodo), அர்ஜென்டினா ஜனாதிபதி ஆல்பர்டோ பெர்னாண்டஸ் (Alberto Fernández), எத்தியோப்பிய பிரதமர் அபி அகமது (Abiy Ahmed) ஆகியோர் மாநாட்டில் உரையாற்றினர்.

உச்சிமாநாட்டில் உரையாற்றிய ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் (Antonio Guterres),
போதிய உள்கட்டமைப்பு மற்றும் தகவல் வசதிகளை வழங்காமல் எதிர்கால உலகில் வளர்ச்சியை அடைவது கடினம் என்று கூறினார். இத்தேவைகளை நிறைவேற்றுவதற்கு “பெல்ட் அண்ட் ரோட் முன்னெடுப்பு” திட்டம் பாரிய உதவியாக இருப்பதாக பொதுச் செயலாளர் சுட்டிக்காட்டினார்.

அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு கடன் நிவாரணம் என்ற சவாலை சமாளிக்க “பெல்ட் அண்ட் ரோட் முன்னெடுப்பு” திட்டம் உதவும் என்றும் அவர் கூறினார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, ஜனாதிபதியின் ஆலோசகர் சமன் அதாவுதஹெட்டி, வெளிவிவகார அமைச்சின் பிரதான அதிகாரி செனரத் திஸாநாயக்க, பீஜிங்கில் உள்ள இலங்கை தூதரக பிரதானி கே.கே. யோகானந்தன், வெளிவிவகார அமைச்சின் கிழக்காசிய பணிப்பாளர் நாயகம் பூஜித பெரேரா, ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் சாண்ட்ரா பெரேரா மற்றும் சர்வதேச விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் பணிப்பாளர் ரிஷான் டி சில்வா ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments