Home Srilanka வடக்கு – கிழக்கு ஹர்த்தாலுக்குத் தமிழ் அரசுக் கட்சியும் ஆதரவு! சுமந்திரன் எம்.பி. அறிக்கை

வடக்கு – கிழக்கு ஹர்த்தாலுக்குத் தமிழ் அரசுக் கட்சியும் ஆதரவு! சுமந்திரன் எம்.பி. அறிக்கை

0

“முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியும் நீதிவானாகவும் இருந்த ரி.சரவணராஜா, தனது நீதித்துறை கடமைகளைச் செய்த காரணத்தால் அச்சுறுதலுக்கு உள்ளாக்கப்பட்டு பதவியிலிருந்து இராஜிநாமா செய்து நாட்டை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டதை எதிர்த்து எதிர்வரும் 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வடக்கு, கிழக்கில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி சார்பில் அனைத்து மக்களையும் கேட்டுக்கொள்கின்றோம்.”

இவ்வாறு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் அறிக்கையூடாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

“இந்தக் கடையடைப்பு நடவடிக்கை மூலம் தமிழ் நீதிபதி ஒருவருக்கு நிகழ்ந்த இந்த மிக மோசமான செயற்பாட்டை திரும்பத் திரும்ப உலகுக்கு எடுத்தக் காட்ட நாம் கடமைப்பட்டுள்ளோம். ஆகவே. இது சம்பந்தமாக அனைவரினது ஒத்துழைப்பையும் முழுமையாக எதிர்பார்க்கின்றோம்.” – என்றும் அந்த அறிக்கையில் சுமந்திரன் எம்.பி. மேலும் குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version