யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியில் சம்பவம் 23 வயதான இரண்டு பிள்ளைகளின் தாயொருவர் கொலை செய்யப்பட்டுள்ள கொடூர சம்பவமும் ஒன்று இடம்பெற்றுள்ளது!!
யாழ்ப்பானம் நாவற்குழி பகுதியில் இன்று காலை கணவனால் கொல்லப்பட்ட இளம் தாயொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலமாக மீட்கப்பட்ட தாயார் நாவற்குழி ஐயனார் கோயிலடி பகுதியில் வசித்து வரும் 23 வயதுடைய யமுனா என்கிற இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மேலும் சம்பவம் குறித்து தெரிய வருகையில்
குடும்ப தகராறினால் கணவரால் இப் பெண் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகித்துள்ளனர்.
மேலும் சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.