குவைத்தில், கழிவுநீர் கால்வாயின் மூடிக்கு வெளியே இஸ்ரேல் கொடியின் படத்தை வரைந்து போராட்டம்.
குவைத் நாட்டின் கைஃபான் பிளாக்-1 இல் வசிக்கும் சிலர் குவைத்தி குடிமக்கள் இஸ்ரேலுக்கு எதிராக விசித்திரமான முறையில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேலியக் கொடி காலடியில் மிதிக்கத் தகுதியானது என்று போராட்டக்காரர்களில் ஒருவரான புகலீஃபா நாளிதழ்களிடம் தெரிவித்துள்ளார்.
பாலஸ்தீன மக்களுக்கு எதிரான இஸ்ரேலின் வன்முறைக்கு எதிராக கைஃபானில் உள்ள குடிமக்களான நாங்கள் வெளிப்படுத்தக்கூடிய மிகக்குறைந்த எதிர்ப்பு இது என்றும் அவர் கூறியுள்ளார்.
குவைத் நாட்டின் மீது ஈராக் நடத்திய ஆக்கிரமிப்பு மற்றும் அட்டூழியங்களுக்கு அடையாளமாக நாங்கள் இருக்கும் போது, காசாவில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு மற்றும் கொடுங்கோன்மைக்கு எதிராக பாலஸ்தீன மக்களுக்கு அவர் தன்னுடைய ஆதரவை தெரிவித்துள்ளார்.