Home Srilanka ஏழு தமிழ்க் கட்சிகள் இணைந்து புதனன்று மோடிக்குக் கடிதம்!

ஏழு தமிழ்க் கட்சிகள் இணைந்து புதனன்று மோடிக்குக் கடிதம்!

0

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்வரும் புதன்கிழமை 7 தமிழ்க் கட்சிகள் இணைந்து கடிதம் அனுப்பவுள்ளன என்று தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

இந்தியப் பிரதமருக்குத் தமிழ்க் கட்சிகளால் அனுப்பப்படவுள்ள கடிதம் தொடர்பாக யாழ்ப்பாணத்தில் ஊடவியலாளர்கள் இன்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இந்தியப் பிரதமருக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி, தமிழீழ விடுதலை இயக்கம், தமிழ் மக்கள் கூட்டணி,  தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழ்த் தேசியக் கட்சி, ஜனநாயகப் போராளிகள் கட்சி ஆகிய 7 தமிழ்க் கட்சிகள் இணைந்து கூட்டாகக் கடிதம் அனுப்புவது தொடர்பில் இன்றைய தினம் கலந்துரையாடியிருந்தோம்.

இந்தியப் பிரதமருக்கு அனுப்பவுள்ள கடிதத்தில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டியுள்ளது. அதனை எதிர்வரும் நாட்களில் மேற்கொள்ளவுள்ளோம். எதிர்வரும் புதன்கிழமையளவில் நரேந்திர மோடிக்கான கடிதத்தை 7 கட்சித் தலைவர்களும் ஒப்பமிட்டு அனுப்பவுள்ளோம்.” என்றார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version