Friday, December 27, 2024
HomeWorldஇஸ்ரேலிய வீரர்களுக்கு இலவச உணவு வழங்கும் மெக்டொனால்ட்ஸ்: எழுந்துள்ள கடும் விமர்சனம்

இஸ்ரேலிய வீரர்களுக்கு இலவச உணவு வழங்கும் மெக்டொனால்ட்ஸ்: எழுந்துள்ள கடும் விமர்சனம்

ஹமாஸுடன் போர் தொடுக்கும் இஸ்ரேலிய வீரர்களுக்கு மெக்டொனால்ட்ஸ் இலவச உணவை வழங்குவதாக அறிவித்துள்ளது.

ஹமாஸுக்கு எதிராக நடந்து வரும் போரில் இஸ்ரேலிய வீரர்களுக்கு இலவச உணவு வழங்குவதாக லெபனானில் உள்ள மெக்டொனால்ட்ஸ் நிறுவனம் அறிவித்ததைத் தொடர்ந்து, அங்கு பல்வேறு தரப்புக்களும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றன.

இந்நிலையில், இஸ்ரேலின் மெக்டொனால்டு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மருத்துவமனைகள் மற்றும் நாட்டின் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு இலவச உணவு வழங்குவதாக அறிவித்துள்ளது.

“நாங்கள் ஏற்கனவே மருத்துவமனைகள் மற்றும் இராணுவப் பிரிவுகளில் 4,000 பேருக்கு உணவை வழங்கினோம். ஒவ்வொரு நாளும் களத்தில் உள்ள வீரர்களுக்கு உணவளிக்க நாங்கள் உத்தேசித்துள்ளோம்.

மேலும் இந்த நோக்கத்திற்காக ஐந்து உணவகங்களைத் திறந்துள்ளோம்” என்று இஸ்ரேலில் உள்ள மெக்டொனால்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

லெபனானில் அக்டோபர் 13 அன்று இஸ்ரேலிய படைகளுக்கு இலவச உணவு வழங்கும் நிறுவனமான மெக்டொனால்டின் நடவடிக்கைக்கு எதிராக போராட்டங்கள் வெடித்தன.

லெபனானின் ஸ்பின்னீஸில் உள்ள மெக்டொனால்டு பாலஸ்தீனிய குழுக்களால் தாக்கப்பட்டது.

இந்த பின்னணியில், மெக்டொனால்டு ஓமன், காசாவை ஆதரித்து டுவிட்டர் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டது.

மெக்டொனால்டு ஓமான் நிறுவனம் காசாவில் உள்ள முயற்சிகளுக்கு $100,000 நன்கொடை அளித்துள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இந்த கடினமான காலங்களில் நாங்கள் காசாவுக்கு ஆதரவாக நிற்கிறோம். நாம் அனைவரும் காசா மக்களுக்கு உதவுவோம்” என்று மெக்டொனால்ட்ஸ் ஓமான் கூறியுள்ளது.

இந்நிலையில், காசாவில் அக்டோபர் 7ஆம் திகதி நடந்த சண்டையில் இருந்து 724 குழந்தைகள் உட்பட மொத்தம் 2,215 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக ஹமாஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதே காலகட்டத்தில் இஸ்ரேலில் 1,300 பேர் உயிரிழந்ததாக இஸ்ரேல் தரப்பு தெரிவித்துள்ளது

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments