Home World அல் கொய்தாவை விட பயங்கரமானது ஹமாஸ்: ஜோ பைடன்.

அல் கொய்தாவை விட பயங்கரமானது ஹமாஸ்: ஜோ பைடன்.

0
இருபத்தி ஏழு அமெரிக்கர்கள் உட்பட 1000 பேருக்கும் மேல் பரிதாபமாக பலியாகிய இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலை அடுத்து, ஹமாஸ் அமைப்பினரை முற்றிலுமாக ஒழிக்க போவதாக கூறி பாலஸ்தீனம் முழுவதும் அவர்களை இஸ்ரேல் தேடி தேடி வேட்டையாடி வருகிறது.
அமெரிக்கா, ஜேர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து உட்பட பல நாடுகள் இஸ்ரேலை ஆதரிக்கின்றன. அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஆதரவாக தனது பெரிய போர் கப்பலை இஸ்ரேல் கடற்பகுதியில் நிறுத்தியுள்ளது.இந்நிலையில், ஹமாஸ் அமைப்பினரை குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பென்சில்வேனியா மாநில பிலடெல்பியாவில் பேசும் போது குறிப்பிட்டதாவது:இஸ்ரேல் மீதான ஹமாசின் தாக்குதல் குறித்த முழு விவரங்களை கேட்க கேட்க, அல் கொய்தாவை விட ஹமாஸ் பயங்கரமான அமைப்பு என்பதில் சந்தேகமே இல்லை.
நாங்கள் இஸ்ரேலுடன் துணை நிற்கிறோம் என்பதிலும் சந்தேகமே வேண்டாம். அமெரிக்க உள்துறை செயலாளர் ஆன்டனி பிளிங்கன் மற்றும் இராணுவ செயலர் லாயிட் ஆஸ்டின் இஸ்ரேலுக்கு நேரில் சென்றனர். பதில் தாக்குதலுக்கு இஸ்ரேலுக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய்ய அமெரிக்க தயாராக உள்ளது.
பாலஸ்தீனத்தின் பெரும் பகுதி மக்கள் ஹமாஸிற்கு ஆதரவு அளிக்கவில்லை என்பதை மறுக்க முடியாது. இப்போரில் காணாமல் போயிருக்கும் அமெரிக்கர்களை குறித்து அவர்களின் குடும்பங்களுடன் தொடர்பு கொண்டு நான் ஆறுதல் கூறி அவர்களை மீட்க அமெரிக்கா அனைத்தையும் செய்ய உள்ளது என நம்பிக்கை தெரிவித்தேன் என பைடன் கூறியுள்ளார். 

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version