Home Srilanka ஹர்த்தால் தொடர்பில் விக்கியின் வீட்டில் முன்னாயத்த கலந்துரையாடல்!

ஹர்த்தால் தொடர்பில் விக்கியின் வீட்டில் முன்னாயத்த கலந்துரையாடல்!

0

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கோரியும், தமிழ்பேசும் மக்கள் மீதான பேரினவாதத்தின் அடக்குமுறைகளுக்கு எதிராகவும் தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஏற்பாட்டில் வடக்கு – கிழக்கில் எதிர்வரும் 20ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள ஹர்த்தால் தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் இன்று (13) மாலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் யாழ். இல்லத்தில் இடம்பெற்றது.

இந்தக் கலந்துரையாடலில் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன், தமிழீழ விடுதலைக் கழகத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் என்.ஸ்ரீகாந்தா, தமிழ்த் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம், ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன், ரெலோவின் யாழ். மாவட்டப் பொறுப்பாளர் தியாகராஜா நிரோஷ் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version