யாழ்ப்பாணம், ஸ்ரான்லி வீதியில் இலங்கை வங்கிக்கு அருகாமையில் உள்ள ஒழுங்கை ஒன்றில் இருந்து பெண் ஒருவரின் சடலம் இன்று (12) பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்துக்குச் சென்ற யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டு சடலத்தை வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார்.
5 அடி உயரம், பொது நிறம், நீல நிறச் சட்டை, மண்ணிறச் சேலை அணிந்த, நரை முடியுடைய பெண்ணின் சடலத்தை அடையாளம் காட்டுமாறு கோரப்பட்டுள்ளது.
சடலம் யாழ். போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.