இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தினால் சங்கத்தின் 10வது ஆண்டு நிறைவில் அமரர் சிவகுருநாதன் ஞாபகார்த்தமாக நடாத்தபடும் யாழ்மாவட்ட ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட அணிகளை கொண்ட கரப்பந்தாட்டப்போட்டியின் இறுதி ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை (15-10-2023) இரவு 7.30 மணிக்கு மின்னொளியில் இளவாலை மெய்கண்டான் பாடசாலை அருகே உள்ள வாலிபத்திடலில் இடம்பெறவுள்ளது!
இவ் இறுதி ஆட்டத்தில் 1வது அரையிறுதியில் வெற்றி பெற்ற புத்தூர் சென்றல் ஸ்டார் அணியுடன், சனக்கிழமை (14-10-2023) இடம்பெறவுள்ள 2வது அரையிறுதி ஆட்டத்தில் மோதும் ஆவரங்கால் மத்தி எதிர் ஆவரங்கால் இந்து இளைஞர் அணிகளில் வெற்றி பெறும் அணி மோத உள்ளமை குறிப்பிடத்தக்கது!