எதிர்வரும் 20ஆம் திகதி வடக்கு, கிழக்கு மாகணங்களில் பூரண ஹர்த்தாலை நடத்துவதற்குத் தமிழ்க் கட்சிகள் தீர்மானம் எடுத்துள்ளன.
முல்லைத்தீவு நீதிபதி விவகாரத்தைக் கண்டித்தும், நீதி கோரியும் ஹர்த்தால் அனுஷ்டிப்பது தொடர்பான கூட்டம் யாழ். தந்தை செல்வா கலையரங்கில் இன்று மாலை நடைபெற்றது.
அரசியல் கட்சிகளுக்கும் பொதுமக்ளுக்கும் இடையில் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலிலேயே எதிர்வரும் 20 ஆம் திகதி ஹர்த்தால் அனுஷ்டிக்கத் தீர்மானித்துள்ளதாக ஐனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.