Friday, December 27, 2024
HomeWorldUS Newsஉலகின் மிகப்பெரிய பூசணிக்காய் கின்னஸ் சாதனை:

உலகின் மிகப்பெரிய பூசணிக்காய் கின்னஸ் சாதனை:

யார் பெரிய பூசணிக்காயை வளர்த்து காட்சிப்படுத்துகிறார்களோ அவர்களுக்கு பரிசுத்தொகை வழங்கும் போட்டி அமெரிக்காவின் கலிபோர்னியாவில் Half Moon Bay எனும் பகுதியில் நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் பல விவசாயிகள் ஆர்வமுடன் பங்கேற்று வருகின்றனர்.

உலகின் பூசணிக்காய்களில் தலைநகரம் என கூறப்படும் Half Moon Bay-இல் 50 ஆவது தடவையாக இம்முறை நடந்த போட்டியில், 1,247 கிலோகிராம் எடையுள்ள உலகின் மிகப்பெரிய பூசணிக்காய் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

மின்னசோட்டா (Minnesota) மாநிலத்தை சேர்ந்த 43 வயதான தோட்டக்கலை வல்லுனரும், பயிற்சியாளருமான Travis Gienger என்பவர் போட்டிக்கு கொண்டு வந்திருந்த இந்த மிகப்பெரிய பூசணிக்காய் தான் பலரின் கவனத்தையும் ஈர்த்தது.

அவர் வளர்த்த பூசணிக்காய் மிகப் பெரியது என போட்டியில் தெரிவு செய்யப்பட்டு, அவருக்கு 30,000 டொலர்கள் பரிசுத்தொகையும் அறிவிக்கப்பட்டது.

டிராவிஸ் 30 வருடங்களுக்கும் மேலாக பூசணிக்காய் வளர்ப்பிலும் விவசாயத்திலும் ஆர்வம் செலுத்தி வருகிறார்.

இப்போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்தவர் வளர்த்த பூசணிக்காய், டிராவிஸ் வளர்த்ததை விட 113 கிலோகிராம்கள் எடை குறைவானது.

2020 ஆம் ஆண்டு முதல் டிராவிஸ் இந்த போட்டியில் தொடர்ச்சியாக பங்கேற்று வருவதுடன், இறுதியாக நடைபெற்ற நான்கு போட்டிகளில் மூன்றில் அவர் பரிசு பெற்றுள்ளார்.

இத்தாலியை சேர்ந்த ஒருவரின் 1226 கிலோ எடை கொண்ட பூசணிக்காய் தான் உலகின் மிகப்பெரிய பூசணிக்காய் என்ற கின்னஸ் சாதனையை படைத்திருந்தது.

அந்த சாதனையை தற்போது டிராவிஸின் 1,247 கிலோகிராம் பூசணிக்காய் முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments