Home World ரஸ்யாவில், உக்ரைன் மேற்கொண்ட ஆளில்லா விமானதாக்குதலில் பல விமானங்கள் சேதம்.

ரஸ்யாவில், உக்ரைன் மேற்கொண்ட ஆளில்லா விமானதாக்குதலில் பல விமானங்கள் சேதம்.

0

ரஸ்யாவின் வடகிழக்கில் உள்ள பஸ்கோவ் நகரில் உள்ள விமானநிலையத்தை இலக்குவைத்து உக்ரைன் மேற்கொண்ட ஆளில்லா விமானதாக்குதலில் பல விமானங்கள் சேதமாக்கப்பட்டுள்ளன  என தகவல்கள் வெளியாகின்றன.

இராணுவம் தாக்குதலை முறியடிக்கின்றது என அந்த பகுதியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.பாரிய தீயை காண்பிக்கும் வீடியோவை அவர் பதிவிட்டுள்ளார் – பெரும் வெடிப்பு சத்தங்களை அந்த வீடியோவில் கேட்க முடிகின்றது.

நான்கு இலுசின் 76 போக்குவரத்து விமானங்கள் சேதமடைந்துள்ளன என உறுதிப்படுத்தப்படாத ரஸ்ய தகவல்கள் தெரிவிக்கின்றன.

பஸ்கோவ் நகரம் உக்ரைனிலிருந்து 600 கிலோமீற்றர் தொலைவில் எஸ்டோனியாவின் எல்லைக்கு அருகில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

உக்ரைன் ரஸ்யாவிற்குள் மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் குறித்து கருத்துகூறுவதை தவிர்த்துவந்துள்ளது.

பஸ்கொவ் நகரின் மீதான ஆளில்லா விமான தாக்குதல்களை பாதுகாப்பு அமைச்சு முறியடிக்கின்றது என  அந்த பகுதியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

தாக்குதல் இடம்பெற்ற பகுதியில் நான் நின்றிருந்தேன் உயிரிழப்பு எதுவுமில்லை என ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அவசரநிலைக்கான அதிகாரிகளை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ள டாஸ் விமானங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

ஆளில்லா விமானதாக்குதல் காரணமாக நான்கு விமானங்கள் சேதமடைந்தன தீப்பிடித்ததில் இரண்டு விமானங்கள் வெடித்துச்சிதறின என டாஸ் தெரிவித்துள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version