இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி கோரி இன்றைய தினம் மன்னார் சதோச மனித புதைகுழியில் இருந்து கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வடமாகாணம் முழுவதும் உள்ள காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள், பொது அமைப்புக்கள், சிவில் அமைப்புக்கள், சட்டத்தரணிகள், அருட்தந்தையர்கள் உட்பட பலர் இப் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.மன்னார் சதோச மனித புதைகுழியில் ஆரம்பமான போராட்டம் மன்னார் சுற்று வட்ட பாதை ஊடாக தபாலகம் வைத்திய சாலை ஊடாக மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இறுதி நிகழ்வுடன் நிறைவடைகிறது.
போராட்டக்காரர்கள் கறுப்பு கொடிகளை ஏந்தி காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளின் புகைப்படங்களை சுமந்து கோஷங்களை எழுப்புயவாரு போராட்டத்தில் முன்னெடுத்தனர்.