யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பிரதான வீதியின் வல்லை சந்திப் பகுதியில், பட்டா ரக வாகனம் தீப்பிடித்து எரிந்துள்ளது.
குறித்த சம்பவமானது இன்று(29.08.2023) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மின் கசிவினால் வாகனம் தீப்பற்றியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
பருத்தித்துறை பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் சென்று கொண்டிருந்த பொருட்கள் ஏற்றும் பட்டா ரக வாகனமே இவ்வாறு எரிந்து நாசமாகியுள்ளது.