Home Srilanka யாழில் ஊசி மூலம் ஹெரோயின் ஏற்றியவர் கிருமித்தொற்றுக்குள்ளாகி மரணம்.

யாழில் ஊசி மூலம் ஹெரோயின் ஏற்றியவர் கிருமித்தொற்றுக்குள்ளாகி மரணம்.

0

யாழ்ப்பாணத்தில் ஊசி மூலம் ஹெரோயின் போதை பொருளை பாவித்து வந்த இளைஞர் ஒருவர் இருதயத்தில் கிருமித் தொற்றுக்கு உள்ளாகிய நிலையில் யாழ் போதனா வைத்திய சாலையில் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,

நீண்ட காலமாக ஆனைக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் நீண்ட காலமாக ஹரோயின் உயிர்கொல்லிப் போதைப் பொருளை ஊசி மூலம் உடலுக்குள் செலுத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் ஊசி மூலம் நோக்கிருமி உடலில் தொற்றுக் கொள்ளாக்கிய நிலையில் நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் கடும் காய்ச்சல் காரணமாக யாழ் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரிடம் பெறப்பட்ட இரத்த மாதிரிகளின் அடிப்படையிலும் அவரிடம் வைத்தியர்களால் வினாவப்பட்ட போது குறித்த நபர் உயிர் கொல்லி ஹெரோயின் போதைப் பொருளுக்கு அடிமையான விடயம் தெரிய வந்தது.

இந்நிலையில் குறித்த நபரை மேலதிக வைத்தியப் பரிசோதனைகளுக்கு உட்படுத்திய நிலையில் கிருமி தோற்று ஆதிகளவில் இதயத்தை தாக்கிய நிலையில் அவரைக் காப்பாற்றுவது கடினம் என வைத்தியர்கள் தெரிவித்த நிலையில் தொடர்ந்து சிகிச்சைகள் வழங்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த நபர் சிகிச்சை பலனின்றி யாழ் போதனா வைத்தியசாலை நோயாளர் விடுதியில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் மேலும் ஒருவர் ஊசி மூலம் உயிர்கொல்லி ஹெரோயின் போதை பொருளை பாவித்த நிலையில் உடலில் அதிகளவு கிருமித் தொற்று ஏற்பட்ட நிலையில் ஆபத்தான நிலையில் யாழ் போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version