கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மட்டக்களப்பு மாவட்டங்களில் வெளிநாட்டு பறவைகள் தற்போது சஞ்சரிப்பதைக் காணக்கூடியதாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
செங்கால் நாரை, பூநாரை, கூழைக்கடா, கடல்காகம், கடல்ஆலா, கூழைக்கடா, பாம்புத்தாரா ,சாம்பல்நாரை, வெட்டிவாயன், கரன்டிவாயன்,வெள்ளை அரிவாள் மூக்கன், நாரை இனங்கள் அன்னப் பறவை உள்ளிட்ட கொக்கு இனங்கள் இவ்வாறு இப்பிரதேசங்களில் காணக்கூடியதாக உள்ளது குறிப்பிடத்தக்கது.