அவுஸ்திரேலிய பெண்ணொருவரின் மூளைக்குள் இருந்து உயிருடன் 8 சென்டிமீற்றர் புழுவை மீட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
மூளைக்குள் இருந்து உயிருடன் புழு மீட்கப்பட்டமை இதுவே முதல்தடவை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கான்பெராவில் கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சையின் போது இந்தபுழு கண்டுபிடிக்கப்பட்டமை குறித்த தகவல்களை சத்திரசிகிச்சை நிபுணர்கள் தற்போதே வெளியிட்டுள்ளனர்.
பெண்ணொருவர் வழமைக்கு மாறான வயிற்றுவலி இருமல் இரவுவியர்வை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டார்,அவருக்கு மனச்சோர்வு மறதிபோன்றவைகளும் காணப்பட்டன என தெரிவித்துள்ள வைத்தியர்கள் அந்த புழு இரண்டு மாதங்களாக அவரின் மூளைக்குள் இருந்திருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.
2021 பிற்பகுதியில் குறிப்பிட்ட பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்,அவ்வேளை மேற்கொள்ளப்பட்ட ஸ்கானில் மூளையின் வலது மூளையில் வித்தியாசமான காயம் இருப்பது தெரியவந்தது.
எனினும் இதற்கான காரணம் 2022லேயே தெரியவந்துள்ளது.
நியுசவுத்வேல்சின் தென்கிழக்கில் ஏரி ஒன்றிற்கு அருகில் வசித்துவந்த அந்த பெண் தற்போது உடல்நிலை தேறிவருகின்றார்.
பெண்ணின் மூளையில் இவ்வாறான புழுகண்டுபிடிக்கப்பட்டுள்ளது இதுவே முதல் தடவை என ஆராய்;ச்சியாளர்கள் உருவாகிவரும் தொற்றுநோய்கள் குறித்த சஞ்சிகையில் தெரிவித்துள்ளனர்.
நான் அதனை வெளியில் இழுத்தேன் அது அசையதொடங்கியது என புழுவை மூளைக்குள் கண்டுபிடித்த நரம்பியல் சிகிச்சை நிபுணர் தெரிவித்துள்ளார்.
ஸ்கானில் வித்தியாசமாக தென்பட்ட மூளையின் பகுதியை தொட்டபோது நான் அதனை உணர்ந்தேன் என அவர் தெரிவித்துள்ளார்.
கடவுளே இது அசாதாரணமானதாக இருக்கின்றதே என நான் நினைத்தேன் இதனைவிட அசாதாரணமாக எதுவும் இருக்க முடியாது என வைத்தியர் பண்டி தெரிவித்தார்.