Friday, December 27, 2024
HomeWorldஇம்ரான்கானின் சிறை தண்டனையை நிறுத்தி வைத்தது பாக்கிஸ்தான் நீதிமன்றம்.

இம்ரான்கானின் சிறை தண்டனையை நிறுத்தி வைத்தது பாக்கிஸ்தான் நீதிமன்றம்.

அரசு கருவூல பரிசுப் பொருட்களை முறைகேடாக விற்பனை செய்த வழக்கில், இம்ரான் கானுக்கு விதிக்கப்பட்ட 3ஆண்டு தண்டனையை இஸ்லாமாபாத் ஐகோர்ட் நிறுத்தி வைத்துள்ளது. இதனால் இம்ரான் கான் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

அரசு கருவூல பரிசுப் பொருட்களை முறைகேடாக விற்பனை செய்த வழக்கில், இஸ்லாமாபாத் நீதிமன்றம், இம்ரான் கானுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.

இதையடுத்து அவர் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள அட்டாக் சிறையில் அடைக்கப்பட்டார். இம்ரான் கானுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு இன்று (ஆகஸ்ட் 29) இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

விசாரித்த தலைமை நீதிபதி அமீர் பரூக் மற்றும் நீதிபதி தாரிக் முஹம்மது ஆகியோர் இம்ரான்கானுக்கு விதிக்கப்பட்ட மூன்றாண்டு சிறைத்தண்டனையை நிறுத்தி வைத்தனர். இதனால் இம்ரான்கான் ஜாமினில் விரைவில் வெளியே வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இம்ரான் கான் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

சிறையில் முன்னாள் பிரதமராக இருந்தும், திறந்த கழிப்பறையுடன், எறும்புகள், பூச்சிகள் நிறைந்த அறையில் உள்ளார் என அவரது தரப்பினர் குற்றம் சாட்டினர். இதனால் சிறைத்துறை தலைமை ஆய்வாளர் இம்ரான் கானுக்கு அளிக்கப்பட்டிருக்கும் வசதிகள் குறித்து பாகிஸ்தான் உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார்.

அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இம்ரான் கானின் தனிமைக்கு இடையூறு இல்லாத வகையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அவருக்கு படுக்கை, தலையணை, நாற்காலி, ஏர் கூலர், பேன், குர்ஆன் உட்பட பல புத்தகங்கள், செய்தித்தாள், ப்ளாஸ்க், பேரீச்சம்பழம், தேன், நறுமண பாட்டில்கள், மற்றும் சோப் உட்பட அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

டாக்டர்களால் பரிசோதிக்கப்படும் தரமான உணவு அவருக்கு வழங்கப்படுகிறது. அவரது உடல் நலனை காக்கவும், அவசர உதவிக்காகவும் 5 டாக்டர்கள் சுழற்சி முறையில் பணியில் இருக்கின்றனர். தனக்கு அளிக்கப்பட்டுள்ள வசதிகள் குறித்து இம்ரான் கானும் திருப்தி தெரிவித்துள்ளார். இம்ரான் கானுக்கு சிக்கன், நெய்யில் சமைத்த ஆட்டிறைச்சியும் வழங்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments