மதுரை ரயில் விபத்து – 9பேர் பலியானது பெரும் வேதனையாக உள்ளது.
மதுரை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் பெட்டியில் சிலிண்டர் வெடித்ததில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது.
லக்னோவில் இருந்து சுற்றுலா வந்தவர்கள், தடையை மீறி ரயிலில் கேஸ் சிலிண்டரை ஏற்றி வந்து உள்ளேயே சமையல் செய்துள்ளனர்.
கொள்ளையர்கள் ஏறிவிடுவார்கள் என பெட்டியை பூட்டி வைத்திருந்ததால், தீப்பற்றியபோது வெளியேற முடியாமல் தீயில் சிக்கி உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
ஒரு சிறு ரயில் விபத்து என்றாலே ரயில்வே அமைச்சர் பதிவு விலகியது எல்லாம் ஒரு கனவு போல் உள்ளது. ஜனநாயகத்தில் Accountability என்பது கிலோ என்ன விலை என்கிற காலத்தில் வாழ்கிறோம்.