Home Srilanka பொலிஸாரை விமர்சித்த கஜேந்திரகுமாரின் வீட்டைப் பாதுகாப்பது அதே பொலிஸ்தான்! –

பொலிஸாரை விமர்சித்த கஜேந்திரகுமாரின் வீட்டைப் பாதுகாப்பது அதே பொலிஸ்தான்! –

0

“பொலிஸாரைக் கண்டபடி விமர்சித்து அரசியல் செய்து வந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி., தற்போது பொலிஸாரைத் தனது கொழும்பு வீட்டுக்கு வரவழைத்துப் பாதுகாப்புக்கு நிறுத்தியுள்ளார். இது அவருக்கு வெட்கக்கேடான விடயம்.”

இவ்வாறு புதிய ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில எம்.பி. தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“வடக்கில் தமிழ் மக்கள் மத்தியிலும், தெற்கில் சிங்களவர்கள் மத்தியில் இனவாதக் கருத்துக்களால் தனது அரசியலை முன்நகர்த்துகின்றார் கஜேந்திரகுமார்.

கொழும்பில் மக்களின் எதிர்ப்புக்குப் பயந்த அவர், முற்கூட்டியே பெருமளவு பொலிஸாரைத் தனது வீட்டுக்கு வரவழைத்து பாதுகாப்புக்கு நிறுத்தியுள்ளார்.  

கஜேந்திரகுமாருக்குத் துணிவு இருந்தால் பாதுகாப்புக்கு நிறுத்தியுள்ள பொலிஸாரை அகற்றிவிட்டு மக்கள் முன்னிலையில் விவாதம் செய்ய வரட்டும்.” – என்றார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version