பண்டாரவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹோட்டல் அறையொன்றில் பெண்ணொருவரைக் கொன்றுவிட்டு தப்பிச் சென்ற சந்தேக நபரை கைது செய்வதற்கு பொலிஸ் தலைமையகம் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது.
மேற்படி புகைப்படத்தில் உள்ள சந்தேக நபர் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் பண்டாரவளை தலைமையக பொலிஸ் பரிசோதகர் (0718591523) மற்றும் குற்றப் புலனாய்வு பிரிவு நிலைய பொறுப்பதிகாரி (0718710108, 07185994033) இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு பொலிஸ் தலைமையகம் கேட்டுக்கொள்கிறது.