Home Srilanka கடன் வட்டி வீதங்கள்இலங்கையிலுள்ள சகல வர்த்தக வங்கிகளுக்கும் மத்திய வங்கி உத்தரவு.

கடன் வட்டி வீதங்கள்இலங்கையிலுள்ள சகல வர்த்தக வங்கிகளுக்கும் மத்திய வங்கி உத்தரவு.

0

கடன் வட்டி வீதங்கள் தொடர்பில் உரிமம் பெற்ற சகல வர்த்தக வங்கிகளுக்கும் இலங்கை மத்திய வங்கி உத்தரவொன்றை பிறப்பித்துள்ளது.

இதன்படி, உரிமம் பெற்ற சகல வர்த்தக வங்கிகளும் கடன் வட்டி வீதங்களை மத்திய வங்கியின் சுற்றறிக்கைக்கு அமைய மாற்றியமைய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய வங்கியின் சுற்றறிக்கை
கடன் வட்டி வீதங்களை மாற்றியமைத்து இலங்கை மத்திய வங்கி சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.

சந்தை வட்டி வீதங்களில் நிதி நிலைமைகள் கணிசமான அளவில் தளர்த்தப்பட்ட போதிலும், சில நிதி நிறுவனங்களின் கடன் வழங்கும் பொருட்களின் மீதான வட்டி வீதங்கள் தொடர்ந்து மிகையாகவே உள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அத்துடன் தற்போதைய பணவியல் கொள்கை நிலைப்பாட்டிற்கு குறித்த தரப்பினர் இணங்கவில்லை எனவும், இது தனிநபர்கள் மற்றும் வணிகங்களுக்கு சவால்களை ஏற்படுத்துவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சகல வர்த்தக வங்கிகளுக்கும் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு
இதன்படி, உரிமம் பெற்ற சகல வர்த்தக வங்கிகளும் கடன் வட்டி விகிதங்களை மத்திய வங்கியின் சுற்றறிக்கைக்கு அமைய மாற்றியமைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கமைய அடகுக் கடனுக்கான வட்டி வீதம் ஆண்டுக்கு 18 சதவீதமாக குறைக்கப்பட வேண்டும். கடனட்டைகள் மூலம் ரொக்க முன்பணத்திற்கு வசூலிக்கப்படும் வருடாந்த வட்டி வீதம் 28 சதவீதமாக குறைக்கப்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version